Wednesday, April 22, 2020

வேலை நம்மை தேடிவரும் காலம்

வேலை நம்மை தேடிவரும் காலம்

கூகிள் இருந்து நமக்கு வேலை வாய்ப்பு தானாக வருவதை பற்றி ஒரு காமெடி உள்ளது. "அதற்கு நான் எந்த வேலைக்கும் உங்களிடம் விண்ணப்பிக்கவில்லையே? " என்ற நம் கேள்விக்கு கூகிளின் பதில் இப்படியிருக்கும் உங்களின் பயோடேட்டா  மற்றும் நீங்கள் இப்போதுள்ள வேலையை விட்டுவிட போவதும் புதிதாக வேலை தேடுவதும் இப்போதுள்ள வேலைக்கு எவ்வளவு சம்பளம் பெருகிறோம்  என்ற அனைத்து  தகவல்களும் எங்களுக்கு தெரியும்" என்றிருக்கும் 

நினைக்கும்போது இது மிக பிரமிப்பாக  தான்  தோன்றும்   ஆனால் வரும் காலத்தில் வேலை நம்மை தேடித்தான் வரப்போகிறது  சந்தேகம் வேண்டாம். இப்போதே பல மேற்கத்திய நாடுகளில் இது நடந்துகொண்டிருக்கிறது. இந்த கொரோனா  காலத்தில் இது மிக வேகமாக கூடும். நாளைய உலகத்தில் நல்லதொரு வேலை கிடைப்பதற்கு முதலில் தேவை ஒரு "லின்கட் இன்"   சேவை.
படிப்பிற்கு பின்பு நல்ல ஒரு வேலையில் சேர்வதும் எந்த வேலை ஆனாலும் அதில் மிகச்சிறந்தவர்களாக உருவெடுப்பதும் தான்  அனைத்து பட்டதாரிகளும் விரும்புவார்கள். ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் நடைமுறை மாமூல் படி வேலை தேடுவது அவ்வளவு பலனளிக்காது.

எந்தமுறையில் ஒரு வேலை தேடிக்கொள்வது?

நாளேடுக்களிலும் பத்திரிகைகளிலும் விளம்பரம் அளிக்கப்படும், இப்போதும் இது பின்பற்றப்படுகிறதுண்டு. அடுத்ததாக வலைத்தளம் அறிமுகமான பின்பு அதது கம்பெனிகளின் வலைதள முகவரியில் ஈமெயில் வாரியாக வேலை வாய்ப்புகள் எடுக்கப்பட்டது. அதுமாதிரியான வேலைவாய்ப்பு வலைத்தளங்களும் இயங்குகின்றது. இப்போது சோசியல் வலைத்தளங்கள் வாரியாகவும்  சாத்தியமாகிறது.  இங்குதான் linked in னின் முக்கியத்துவம்.

சோசியல் மீடியா வலைதளங்களை பற்றி நாம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். பேஸ் புக், ட்விட்டர்  இவைகளை போலவே ஒரு சோசியல் வலைத்தளம் தான் linked in. பேஸ் புக், ட்விட்டர்  இவைகளைபோல உல்லாசத்திற்காக பயன்படுத்துவதல்ல இது, அனால் இதை வர்த்தக மேன்பாட்டுகளுக்காகவும் பயோடேட்டா மற்றும வேலைத்திறன் இவைகளை பகிர்வதற்கும் வேலை தேடுதலுக்கும் உபயோகபடும் வலைத்தளம் தான் linked in.

ஒரு பேஸ்புக் ப்ரோபைல் உருவாக்கும் வண்ணத்தில் உங்களுக்கே ஒரு linked in ப்ரொபைல் எளிதாக உருவாக்க முடியும். ஆனால் இங்கு உங்களின் படிப்பு பற்றிய விவரங்களையும் உங்களுக்கு பிடித்த வேலை துறை, உங்கள் முன் வேலை திறமைகள், உங்களுடன் வேலை பார்த்த நபர்களின் பரிந்துரைகள் ஆகியவ பதிவு செய்யலாம். 

ப்ரொபைல் உருவாக்கிய பின் என்ன செய்யவேண்டும்?

வித விதமான துறைகளை சார்ந்த நபர்கள், தொழில் பேட்டைகளுடனான ப்ரொபைல் இதில் உள்ளது. அவையில் இருந்து தேவையான நபருக்கோ தொழில் மேடைக்கோ தொடர்புக்கு அழைப்பு அனுப்பவோ அவர்களை பின்தொடரவோ செய்யலாம். அத்துடன் உங்களின் எண்ணங்களையும் ஒரு சோசியல் மீடியாவில் என்ற போல்  பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு linked in முகவரி உருவாக்கினால் வேலை கிடைப்பது உறுதியா?

linked in பற்றி பேசும்போது யாவரும் முதலில் கேட்க்கும் கேள்வி இதுதான்.
இல்லை என்றது தான் பதில். ஆனால் அதற்க்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாகயிருக்கும். அதற்காக நாம் மும்முரமாக செயல்படவேண்டும்.

எப்படி ?

அனைத்து துறைகளில் பணியாற்றிவரும் மிக சிறந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர், போன்றவர்கள் இதில் இருப்பார்கள். ஒருlinked in ப்ரொபைல் இருப்பின் நமக்கு தேவையான அல்லது பிடித்தமான துறையில் வேலை பார்ப்பவர்களுடன் தொடர்புகொள்ள  வாய்ப்புகள் கிடைக்கும் என்பது  தான் முக்கியமான பிரயோசனம். அப்படி அவர்களுடன் தொடர்புகொள்ளுவதால் அந்த துறையை சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
உலகத்தில் கிட்டத்தட்ட அனைத்து கம்பெனிகளுக்கும் இதில் இடமுண்டு. வேலை வாய்ப்பு விவரங்கள் அறிந்து கொள்ளவும் விண்ணப்பம் அனுப்பவும் இதில் சாத்தியமாகும். இங்கு நீங்கள் தனியாக பயோடேட்டா தயாரிக்க தேவையில்லை.
எவர்களுக்கெல்லாம்  இதில் உறுப்பினராகலாம் ?

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனே இதில் உறுப்பினராகலாம். விரும்பும் துறையில் வேலை பார்ப்பவர்களோடு தொடர்பு ஆரம்பிக்கலாம்.

எதெல்லாம் கவனிக்க வேண்டும்?

1.கண்டிப்பாக உபயோகத்தில் இருக்கும் ஒரு ஈமெயில் ஐடி தேவை. அத்தகைய  ஈமெயில் ஐடி ஒரு மரியாதைக்குரியதாக இருக்கவேண்டும். superman@gmail.com, hotmail@hotmail.com என்ற மாதிரியாக இருப்பது நல்லதல்ல. நீங்கள் மும்முரமாக வேலை தேடும் நபராக இருப்பின் ஒரு நாளில் இரண்டுமுறை கண்டிப்பாக ஈமெயில்  பார்க்கவும்.
2. உங்கள் ப்ரொபைல்க்கு உங்களின் ஒரு போட்டோ இருக்கவேண்டும். பூக்கள், கிளிகள், லாண்ட்ஸ்கபே இவை தவிர்க்கவும். அதிலும் பேஸேபுக்கிலோ இன்ஸ்டாக்ராமிலோ உபயோகித்த படத்தை தவிர்க்கவும். காமெடியான, போதை உபயோகிக்கும் விதமான படங்களும் அவசியம் தவிர்க்கவும். மிக சாதாரணமான உங்கள் முகம் சிறப்பாக தெரியும் படத்தை உபயோகிக்கலாம். கல்யாணத்திற்கோ, பிற விசேஷங்களுக்கோ, செலஃபீ,குழுவாக எடுத்துள்ள படங்களோ போட கூடாது.
3.உங்கள் ப்ரொபைலில் படிப்பு,வேலைத்திறமை, ஆராய்ச்சிகள் பற்றின விவரங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கவேண்டும். இது தயார்பண்ணுவதற்கு ஒருவார காலஅவகாசம் தேவையானால் பரவாயில்லை. எழுத்துப்பிழைகள் யாதும் இல்லாமல் இருக்க வேண்டும். இதற்க்காக ஒரு நண்பனின்  தேவையை  நாடி இதை உருவாக்க செய்வது மிக சிறந்தது.
4. புது தொடர்புகளை உருவாக்கி கொள்ளவேண்டும்.உங்கள் துறையை சார்ந்தவர்களை கண்டறிய வேண்டும். உங்களுடன் படித்தவர்கள், உங்களுடன் வேலை பார்த்தவர்கள் இவர்களையும் உங்கள் தொடர்பில் சேர்க்கலாம்.பேஸேபுக் மாதிரி இதற்கு 5000 என்ற அதிர்வரம்பு கிடையாது. அதிகமான நல் தொடர்புகள் இருப்பின் அது பிற்காலத்தில் புது வேலைக்கு எடுப்பவர்களின் கவனத்திற்கு வரும். linked in இருப்பவர்களை வேறெங்காவது சந்திப்பின் அவர்களுக்கும் linked in தொடர்பு அழைப்பை அனுப்பவும்.இதில் கவனிக்க வேண்டியது இவர்கள்  நம்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை பார்ப்பவர்களாக இருப்பது அவசியம். கூடுதல் பரந்த உலகத்தை அடைவதற்கு வாய்ப்பாகும் இந்த linked in. (இந்த பதிவை படிப்போருக்கு விருப்பமிருந்தால் நாங்கள் தொடர்புக்கான அழைப்பை விடுவிக்கிறோம் .)

5. தொழில் தரப்பில் குணமுடையதாக வரும் அனைவது குழுக்கள் linked in  உள்ளது.அவைகளில்  உங்களுக்கு விருப்பமான குழுக்களை பின்தொடரவும், அங்கு நடக்கும் உரையாடல்களில் பங்குபெறவும் வேண்டும்.
6. உங்கள் ப்ரொபைல் அடிக்கடி புதுப்பித்து கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு எழுத்துத்திறன் இருப்பின் கட்டுரைகள் பதிவு செய்யலாம்.உங்களில் அறிவுகளை பகிர்ந்துகொள்ளும் இடம் இது. இலக்கணப்பிழைகள் வரதவண்ணம் கவனித்து கொள்ளவும்.இதற்காக யாருடைய உதவியும் நடுவதில் தவறில்லை.எழுதும் வார்த்தைகள் எப்பொழுதும் அர்த்தமுள்ளதாகவும் மரியாதைக்குரியவையாகவும் இருக்கவேண்டும். உங்களுக்கு எழுத்து வரவில்லை என்றால் எழுதுபவர்களின் தொடர்புகளில் உரையாடவும், கேள்விகளை கேட்பதும் உங்கள் துறை சார்ந்த புது நுட்பங்களை பற்றி விவாதிப்பதும் மிக நன்று. யாராவது உங்கள் பதிர்வுக்கு கமன்ட் அனுப்பினால் உடனடியாக பதில் அளிக்கவும். வேலை தேடும் நாட்களில் தினமும் ஒரு மணி நேரமாவது linked in ஐ  பார்வை இடுவதில் தப்பில்லை.
7. தினமும்  உங்களுக்கு linked in ல் இருந்து வரும் ஈமெயில் பார்ப்பது அவசியம். ஏதேனும் வேலையிக்கு விண்ணப்பித்திருந்தால் இதை கண்டிப்பாக மறக்க கூடாது. linked in, ஈமெயில் இவற்றில் வரும்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க முயற்சிக்கவும். கொடுக்கும் பதில் தெள்ளத்தெளிவாகவும் மரியாதைக்குரியவையாகவும் இருக்கவேண்டும். வாட்சப் சாட் பண்ணும் விளையாட்டுத்தனமாக பதில் அளிக்கக்கூடாது.

8.உங்களின் ஆசிரியர்களோ சகபணியாளர்களோ உங்களுக்கு எந்த எந்த துறையில் சிறப்புகள் இருக்கிறது என்று உங்கள் linked in ல் அவர்களின் அபிப்ராயத்தை சேர்ப்பது நல்லது. இதை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
9.புதிதாக ஒரு தொடர்பு கிடைத்தால் உடனடி பயோடேட்டா அனுப்பிவிட்டு சார் எனக்கு ஒரு வேலை குடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. பதிலாக ஒரு ஹலோ சொல்லலாம். எப்படி அவர்களுடைய ப்ரோபைலை அடைந்திர்கள் என்று சொல்லவும். அது நன்றாக இருக்கிறதென்று சொல்லலாம். (சும்மா புகழ்வது யாருக்கும் பிடிக்கும் தானே.) அப்புறம் சில நாட்கள் கழிந்து வேலைவாய்ப்பு துறையை பற்றி சில சந்தேகங்களுடன் அவர்களுடன் உரையாடவும். அப்போதும் வேலை வேண்டும் என கேட்கக்கூடாது.நமது ப்ரொபைல் சிறப்பானதும் நமது பரிமாற்றம் ப்ரொபஷனலாகவும் இருந்தால் கண்டிப்பாக அவர்களே உங்களிடம் கூறுவார்கள் 

10.பயோடாட்டாவில் பொய் சொல்லுவது போன்று linked  in ப்ரொபைலில்  பொய்யானவய் கூற வேண்டாம். எனக்கு  நுண்ணறிவில் மிக செயலாக்கம் எல்லாம் உண்டு என்று பேப்பரிலோ மற்றொ  சொல்வது போல் linked in ல் சொல்லமுடியாது. போன ஆறுமாதத்திற்குள் நீங்கள் ஏத்தனை எழுத்தாக்கங்கள் நுண்ணறிவு துறையில் செய்தீர்கள் என்று மற்றவர்களுக்கு சீக்கிரமாக கண்டுபிடித்து விடலாம்.
11. Linked in இப்பொது ஒரு பயற்ச்சி கூடவும் கூட. பலவிதமான பயிற்சிகளும் சான்றிதழ்களும்  கிடைக்கும்.உங்களுக்கு தேவையான படிப்புத்துறையை கற்கலாம். நீங்கள் புது பாடங்கள் கற்றுக்கொள்ளுகிறது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
12. நீங்கள் கண்டிப்பாக வேலை தேடுபவராயிருந்தால் ப்ரீமியம் அக்கவுண்ட்  எடுப்பதில் தவறில்லை.  நீங்கள் linked in ல் அதிகநேரம் இருப்பவரானால் அவர்களே உங்களுக்கு ஒருமாத இலவச சேவையை பரிந்துரைப்பார்கள். அதை உபயோகியுங்கள். உங்கள்  ப்ரொபைல் யார்யார் பார்த்தார்கள் என்றுள்ள விவரம் அப்போது உங்களுக்கே கிடைக்கும் என்பது இதின்  சிறப்பு.

linked in  நாம் பார்ப்பதற்கும் அப்பாற் ஒரு உலகமுண்டு. வேலை தேடுபவர்களை தேடி அங்கு ஆட்கள் உண்டு. அவர் நீங்கள் செய்யும் காரியங்களை கவனித்து வருகிறார்கள். வரும்காலத்தில் big data அனாலிசிஸ் மூலம் தான் வேலைக்கு ஆட்கள்  தேடப்படுவார்கள்.  அதனால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் அனைத்தும் நமது வேலையை பாதிப்புக்குள்ளாக்கும். நமது ப்ரோபைலும் அணுகுமுறைகளும் அவர்களுக்கு பிடித்துப்போகுமாயெனில் அவர்களே நம்மை தேடிவந்து அவர்களுடன் வேலை செய்ய விருப்பம் உள்ளதா என்று கேட்பார்கள்.
அப்போது எல்லாம் சொன்னதுபோல் உங்களுக்கு linked in  இல்லை என்றால் உடனடியாக ஒன்றை உருவாக்குங்கள். உண்டுமாயெனில்  மும்முரமாக செயல்படுங்கள். mentorz4u  பேஜை பின்தொடர மறந்துவிடாதீர்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வேலை வாய்ப்பு மற்றும் அதை அடையும் சூட்சமங்கள் பற்றி அவ்விடத்தில் நாங்கள் என்றும் பதிவுகளை பதிவு செய்கிறோம்.

முரளி தும்மாருக்குடி
Chief of Disaster Risk Reduction in the UN Environment Programme.












No comments:

Post a Comment