Tuesday, February 15, 2011

கன்க்ராட்ஸ் ஆனந்த கன்க்ராட்ஸ்


"டிங் டிங் டிங்   பயனிகளின் பதிவான  கவனிப்பிற்கு வண்டி என் 16649 மங்கலாபுரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் தடம் என் நான்கில்  இன்னும் சற்று  நேரத்திற்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது"

மறைந்திருந்து பேசும் இந்தியன் ரயில்வே கணணி அழகியின்   சத்தம் கேட்டு பிளாட்போரத்தில் நிற்கின்ற  பயணிகள் 
 அனைவரும் தங்களின் கை கடிகாரத்தை உற்று பார்த்தனர். தினசரி பயநிகளாவதால் அவர்களிடம்   ஒரு மாற்றவும் தென்படவில்லை. ரயில்வே சமயம்   அவர்களது வாச்சின் சமையவும் தண்டவாளங்களைப்போலவே இணையாதது அவர்களுக்கு  பழக்கப்பெட்ட விசயமாகயால் எல்லோரும் அவரவர்களின் உலகத்திற்கே திரும்பி சென்றார்கள். அந்த நகரத்திலும் மற்றும் புற நகரத்திலும் வேலைபார்க்கும்  உழியர்களின் ஒரு நாள் உழைப்பிலிருந்து விடுபட்டு சுமைகளை இரக்கிவைக்கப்பட்டு  சாவகாசமாய் உரையாற்றி கொண்டிருன்னர். பிரதான நுழவாழில் அமைந்திருந்த நாலாவது பிளாட்பாரத்தில்  அந்த ஒரு சின்ன கூட்டம் யாவரினுடைய கவனத்தேயும் ஈர்த்திருந்தது. அவர்களின் கும்மாளங்கள் அங்கு முழங்கியிருந்த அனைத்து சத்தங்களேயும் மீறி ஒலித்தது. வயது வரம்புகள் மீறி அவர்கள் பத்துபேர் குழுவாக ஒரு வட்டம் அமைத்து  நின்றிருந்தார்கள். அந்த வட்டத்தின் நடுவே  பௌர்ணமி அன்று பூத்த நிலவை போல் மலர்ந்த முகத்தோடு நின்றிருந்த  அந்த நபரை வாழ்த்தி கொண்டிருந்தார்கள்
"வாழ்த்துக்கள் ஆனந்த வாழ்த்துக்கள்" குழுவில் சின்ன வசயுக்காரர் போலிருந்த அந்த பென்சில் உருவ நபர் ஆனந்தின் கைகளை குலுக்கியவாரே  உரைத்தார்.குழுவின் மற்றவர்கள் ஆனந்தினுடைய தோள்களில் தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

"கண்டிப்பாக ஆனந்த நீ ஒரு மிக பெரிய காரியம் தான் செய்தாய்" கனமான கண்ணாடி அணிந்திருந்த அந்த உயரமான மனிதன் சொன்னார். அவரின் அந்த வார்த்தைகள் அவனை நேழுக வைத்தது. நான்  அப்படி பெரிய காரியம் ஒன்றும் செய்யவில்லை என்று அவன் அவர்களிடம் மறுக்கிறது, அவர்களுடைய சப்தங்களில் வெளியுலகிற்கு கேட்க்கவில்லை.
அப்போது அங்கு இன்னொரு வாலிபர் வந்து சேர்ந்தான். இங்கு என்ன இவ்வளவு ஆனந்தம் அலையடிக்கிதென்று  வியந்த .அவனிடம் கொஞ்சம் குடவயரோடு உயரமான முதுநிலை வயடைந்த ஒருவர் கூறினார் "வாய் பார்த்து நிக்காமல் ஆனந்தை பாராட்டு, இவன் நம்முடைய ஆனந்த ஒரு தீரமான காரியம் பண்ணிவிட்டான்"
"ங்கா.. கா.. என்ன  விஷயம் என்னிடம் கூருங்கள் நானும் அறிவேநல்லாவா "
"ஒன்னும் இல்லையடா " ஆனந்த விவரிப்பதற்காக முழலவும் அவர்கள் அனைவரும் கோறசாக தடுத்தனர்கள்.
"நாங்கள் சொல்கிறோம் நீ கொஞ்சம் பேசாமல் நின்னால் போதும் ..."என்று சந்தன  பொட்டு வச்சவன்  கரிசனமாக  கூறிவிட்டான். அப்போது கார்மேகங்கள் போல் கருத்திருந்த ஒரு  வாலிபர் இடையில் புகுந்து "நிர்த்து  நிர்த்து ஏராவது ஒருத்தர்  சொல்லுங்கப்பா " என்றார். அந்த வார்த்தைகள் அவர்கள் அணைவரேயும் வாய் பூட்ட வச்சது. அவர் துடர்ந்தார் "ஆனந்த கேரளாவின் ஊரக்க வர்க்க மாகிய ஒரு இரண்டு கால் பாம்பிற்கு நடக்கவிருந்த ஆக்சிடெண்டில் இருந்து காப்பாற்றி விட்டான் "என்னது நம்முடைய ஆனந்தா,  ஆச்சரிய மாயிருக்கிறது"
"ஆமாம். நேற்று இங்கு  நடக்குமாயிருந்த அந்த விபத்திலிருந்து - அதாவது விரைந்து வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ்  எஞ்சினுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் நசுங்கி போகவேன்டிய ஒரு பாம்பினை தனது இடது கைகளால் கொரிஎடுத்து இந்த சிவப்பு தரையில் கிடத்திவிட்டான்"
"அப்படி ஒன்றும் இல்லை.அந்த நபர் ஏறமுடியாம கஷ்டப்படும்போது  நான் உதவினேன் அவ்வளவுதான்" நிஷ்களங்கமாக கூறினான்  ஆனந்த.

"இல்லை இல்லை அந்தாள் பாம்பு மாதிரி ஊர்ந்து  இறங்கினபோது ட்ரைன் வந்தது. நீ மட்டும் இழுத்து எடுக்காவிட்டால் அவர் சதஞ்சு போயிருப்பான்"
"ஆம் நான் பார்த்தேன்!"
"பச்சத்தண்ணி மாதிரி இருக்கிற நீ ஒரு பயங்கரமானவன் தாண்டே"
"ஒரு வன விலங்கை பாது காத்த நீ எங்களுக்கு அபிமானம் தான்"
"கன்க்ராட்ஸ் ஆனாத் கன்க்ராட்ஸ்"
அப்போது அந்த கொலாகல்தினிடையே ஒன்றுமே தெரியாத்தவன் மாதிரி, காத்திருந்த அந்த மக்கள் கூட்டதிர்க்கிடையே  ஒரு சூளம் அடித்து கொண்டு பரசுராம் எக்ஸ்பிரஸ் வந்து நின்னது.
********************************************************************************************

இது ஒரு உண்மையான சம்பவம். தண்ணியடிச்சுகிட்டு தள்ளாடிய நிலையில் டிரைனுக்கு முன் விழவேண்டிய ஒரு வாலிபனை எனது  நண்பன் ஆனந்த மிக சாகசமாக காப்பாற்றினான். இதனுடைய ஒரிஜினல் போஸ்ட் malayalatthil inke